பிற விளையாட்டு

விளையாட்டு துளிகள் + "||" + sports Thulikal

விளையாட்டு துளிகள்

விளையாட்டு துளிகள்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டுகளாக இருந்த ஓட்டிஸ் கிப்சனின் (வெஸ்ட் இண்டீஸ்) ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.

* வார்சா நகரில் நடந்த போலந்து ஓபன் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 53 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிசுற்றில் 3–2 என்ற கணக்கில் உள்ளூர் மங்கை ரோக்சனாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சர்வதேச போட்டியில் வினேஷ் போகத் தொடர்ந்து வென்ற 3–வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

*டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாட அடுத்த மாதம் தங்கள் நாட்டிற்கு வருகை தரும் இந்திய அணியினருக்கு உயர்மட்ட பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளன தலைவர் சலிம் சபியுல்லா கான் கூறியுள்ளார். இந்த போட்டியை நேரில் பார்க்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

*தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டுகளாக இருந்த ஓட்டிஸ் கிப்சனின் (வெஸ்ட் இண்டீஸ்) ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. இந்திய தொடரின் போது அந்த அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட இருக்கிறார்.