பிற விளையாட்டு

போலந்து மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட் + "||" + Vinesh Phogat wins 3rd successive gold in 53kg in Poland Open

போலந்து மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட்

போலந்து மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட்
போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகட்.
வார்ஸாவில் நடைபெற்ற போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் மகளிர் 53 கிலோ பிரிவு இறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் உள்ளூர் வீராங்கனை ரோக்ஸனாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

கடந்த 2 மாதங்களில் வினேஷ் போகட் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற யாசர்டோகு போட்டி, ஸ்பெயின் கிராண்ட்ப் ரீ போட்டியிலும்  தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.