பிற விளையாட்டு

டெஸ்ட் அணியின் கேப்டனாக பாப் டு பிளிஸ்சிஸ் நீடிப்பார் - தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் + "||" + Faf du Plessis as captain of the Test team - South Africa Cricket Board

டெஸ்ட் அணியின் கேப்டனாக பாப் டு பிளிஸ்சிஸ் நீடிப்பார் - தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்

டெஸ்ட் அணியின் கேப்டனாக பாப் டு பிளிஸ்சிஸ் நீடிப்பார் - தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்
டெஸ்ட் அணியின் கேப்டனாக பாப் டு பிளிஸ்சிஸ் நீடிப்பார் என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

* புரோ கபடி லீக் தொடரில் பாட்னாவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- உ.பி.யோத்தா (இரவு 7.30 மணி), பாட்னா பைரட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மீது இரட்டை பதவி ஆதாய பிரச்சினை எழுந்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பொறுப்பு மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் குரூப்பின் துணைத் தலைவர் பதவி வகித்ததன் அடிப்படையில் அது தொடர்பாக 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி டிராவிட்டுக்கு கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


* அடுத்த மாதம் தொடங்கும் இந்திய சுற்றுப்பயணத்துக்கான தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக 35 வயதான பாப் டு பிளிஸ்சிஸ் நீடிப்பார் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயல் இயக்குனர் கோரி வான் ஜில் நேற்று தெரிவித்தார். ஆனால் குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு கேப்டன் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

* கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர் கிரீசுக்குள் காலை வைத்து பந்து வீசுகிறாரா அல்லது கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பாலாக வீசுகிறாரா? என்பதை கவனிக்கும் பொறுப்பு கள நடுவர்களிடம் இருக்கிறது. சில சமயம் நடுவர்கள் அதை கவனிக்காமல் விடும் போது சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பாலாக வீசுவதை 3-வது நடுவர் மூலம் கண்டுபிடித்து தீர்வு காண ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.சோதனை முயற்சியாக அடுத்த 6 மாதங்கள் சில சர்வதேச தொடர்களில் இது அமல்படுத்தப்பட உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட், 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.
2. பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீட்டிப்பு
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீட்டிக்கப்பட்டுள்ளார்.