பிற விளையாட்டு

பேட்மிண்டன் தரவரிசையில் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 7 இடம் உயர்வு + "||" + Rangrehetti-Chirac Shetty rises 7 places in badminton rankings

பேட்மிண்டன் தரவரிசையில் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 7 இடம் உயர்வு

பேட்மிண்டன் தரவரிசையில் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 7 இடம் உயர்வு
பேட்மிண்டன் தரவரிசையில் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 7 இடம் உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

சர்வதேச பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து 5-வது இடத்திலும், சாய்னா நேவால் 8-வது இடத்திலும் உள்ளனர்.


ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை முதல் முறையாக டாப்-10 இடத்திற்குள் வந்துள்ளது. சமீபத்தில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் உலக சாம்பியன் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்த ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை 16-வது இடத்தில் இருந்து 7 இடங்கள் ஏற்றம் கண்டு 9-வது இடத்தை பிடித்துள்ளது.

தரவரிசை முன்னேற்றத்தால் உற்சாகம் அடைந்துள்ள 22 வயதான மும்பையைச் சேர்ந்த சிராக் ஷெட்டி கூறுகையில், ‘தாய்லாந்து ஓபனை வென்றதன் மூலம் எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதே உத்வேகத்தை விரைவில் தொடங்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன். உலக சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்றில் இருந்தே கடினமானதாக இருக்கும். நாங்கள் இப்போது நன்கு முதிர்ச்சி அடைந்திருப்பதால் முன்பை விட நெருக்கடியை திறம்பட சமாளிக்கிறோம்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. பேட்மிண்டன் தரவரிசையில் லக்‌ஷயா சென் முன்னேற்றம்
பேட்மிண்டன் தரவரிசையில் லக்‌ஷயா சென் முன்னேறி உள்ளார்.
2. பேட்மிண்டன் தரவரிசையில் சவுரப் வர்மா முன்னேற்றம்
பேட்மிண்டன் தரவரிசையில் சவுரப் வர்மா முன்னேறி உள்ளார்.