உலகளவில் அதிக சம்பளம் பெரும் வீராங்கனைகள் பட்டியல் இந்தியாவின் பி.வி.சிந்து


உலகளவில் அதிக சம்பளம் பெரும் வீராங்கனைகள் பட்டியல் இந்தியாவின் பி.வி.சிந்து
x
தினத்தந்தி 7 Aug 2019 8:43 AM GMT (Updated: 7 Aug 2019 8:43 AM GMT)

உலகளவில் அதிக சம்பளம் பெரும் டாப்-100 விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மட்டுமே இடம்பிடித்துள்ளார்.

அதிக சம்பளம் பெரும் உலக விளையாட்டு வீராங்கனைகள்  முதல் 100 பேர் கொண்ட பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் அண்மையில் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 13வது இடத்தை பிடித்துள்ளார். இவருடைய வருமானம் 5.5 மில்லியன் டாலர்களாகும். இந்திய மதிப்பில் இது சுமார் 38 கோடி ரூபாயாகும்.

இதன் மூலம் இந்தியாவின் அதிக வருமானம் பெரும் விளையாட்டு வீராங்கனையாக சிந்து மாறியுள்ளார். 2018ல் நடைபெற்ற உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் நோசோமி ஒகுராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இப்பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிக சம்பளம் பெரும் விளையாட்டு வீராங்கனைகள்  பட்டியல்:

1. அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் 29.2 மில்லியன் டாலர்

2. ஜப்பான் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா, 24.3 மில்லியன் டாலர்

3. ஜெர்மனி டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 11.8 மில்லியன் டாலர்

Next Story