பிற விளையாட்டு

இந்திய வில்வித்தை சங்கம் இடைநீக்கம் + "||" + Indian Archery Association Suspension

இந்திய வில்வித்தை சங்கம் இடைநீக்கம்

இந்திய வில்வித்தை சங்கம் இடைநீக்கம்
இந்திய வில்வித்தை சங்கம் இரண்டு பிரிவாக இயங்கி வருகிறது. அதனை ஒரே சங்கமாக இணைத்து புதிதாக நிர்வாகிகள் தேர்தல் நடத்தும்படி உலக வில்வித்தை சம்மேளனம் அறிவுறுத்தி இருந்தது.
கொல்கத்தா,

கடந்த மாதம் இறுதிக்குள் அதனை செய்து முடிக்க காலக்கெடுவும் விதித்து இருந்தது. இந்திய வில்வித்தை சங்க நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தாங்கள் அளித்த காலக்கெடுவுக்குள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வராததால் இந்திய வில்வித்தை சங்கத்தை, உலக வில்வித்தை சம்மேளனம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் வருகிற 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறும் உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டும் தேசிய கொடியின் கீழ் இந்திய அணி பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

‘இந்த மாதம் இறுதிக்குள் இந்திய வில்வித்தை சங்க பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அடுத்து நடைபெறும் ஆசிய மற்றும் ஆசிய பாரா சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர்களை எந்த வகையில் பங்கேற்க அனுமதிப்பது என்பது குறித்து உலக வில்வித்தை சம்மேளன செயற்குழுவில் முடிவு செய்யப்படும்’ என்று உலக வில்வித்தை சம்மேளன பொதுச்செயலாளர் டாம் டிலென் தெரிவித்துள்ளார்.