பிற விளையாட்டு

புரோ கபடி: மும்பையை வீழ்த்தியது பெங்கால் + "||" + Pro Kabaddi: Bengal Team beat Mumbai

புரோ கபடி: மும்பையை வீழ்த்தியது பெங்கால்

புரோ கபடி: மும்பையை வீழ்த்தியது பெங்கால்
புரோ கபடி போட்டியில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி வெற்றிபெற்றது.
பாட்னா,

7-வது புரோ கபடி லீக் தொடரில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பை அணியை (யூ மும்பா) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் 16-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை கண்ட மும்பை அணி பிற்பாதியில் கோட்டை விட்டது. முடிவில் பெங்கால் வாரியர்ஸ் 32-30 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. 7-வது லீக்கில் ஆடிய மும்பைக்கு இது 4-வது தோல்வியாகும்.


மற்றொரு ஆட்டத்தில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி 41-20 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. ஆமதாபாத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-தமிழ் தலைவாஸ் (இரவு 7.30 மணி), புனேரி பால்டன்-தபாங் டெல்லி (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.