பிற விளையாட்டு

ஐ.பி.எல் போல வணிகமயமாக்கப்படும் கேரள படகுப் போட்டி + "||" + Kerala to host IPL-type boat race championships

ஐ.பி.எல் போல வணிகமயமாக்கப்படும் கேரள படகுப் போட்டி

ஐ.பி.எல் போல வணிகமயமாக்கப்படும் கேரள படகுப் போட்டி
நேரு டிராபி படகுப்போட்டி ஐ.பி.எல் போல நடத்தப்படவிருப்பதாகவும் பரிசுத்தொகையை 5.9 கோடியாக உயர்த்தி இருப்பதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது
கொச்சி: 

இந்த வார இறுதியில் தொடங்கி  மூன்று மாதம் நடைபெறவிருக்கும்  சாம்பியன்ஸ் போட் லீக் (சிபிஎல்)  ஒன்பது அணிகள் பங்கேற்கவிருப்பதாகவும் 5.9 கோடி ரூபாய்  பரிசுத் தொகை வழங்கவிருப்பதாகவும், மேலும்  இம்முறை  மாநிலம் முழுவதும் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்  கேரள அரசு தெரிவித்துள்ளது.

முதல் மற்றும் தொடக்கப்போட்டி அலப்புழாவில் உள்ள புன்னமடா ஏரியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கொடியேற்றி தொடங்கி வைப்பார். சாம்பியன்ஷிப்பின் தொடக்கப் போட்டியில்  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இந்த படகு லீக் போட்டி ஆகஸ்ட் 10 தொடங்கி நவம்பர் 01 அன்று (கேரளா உருவான நாள்) கொல்லத்தில் முடிவடையும்.

இதுகுறித்து கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது, 

சாம்பியன்ஸ் போட் லீக் (சிபிஎல்)  சிதறியுள்ள பாம்பு-படகு பந்தயங்களை வணிகமயமாக்குவது மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக  மாற்றுவதே முதன்மை நோக்கமாகும்

கேரள சுற்றுலாத்துறை சிபிஎல் க்கு என ஒரு ஏலத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம்  ஐபிஎல் கிரிக்கெட்  வடிவத்தில் நடத்தப்படவிருப்பதாகவும், இதன் மூலம் படகு வீரர்கள் மற்றும் கேரள சுற்றுலாத்துறை நல்ல முன்னேற்றம் அடையும்.ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து அக்டோபர் பிற்பகுதி வரை கேரள மழைக்காலங்களில் தொலைதூரத்திலிருந்தும் பல்வேறு வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்க்கும் அளவிற்கு சிபிஎல் ஒரு கண்கவர் சுற்றுலா தயாரிப்பாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். "

பங்கேற்கும் அணிகள் :

டிராப்பிக்கல் டைட்டன்ஸ் (பாரம்பரியமாக, கிராம படகு கிளப்), பேக்வாட்டர் நைட்ஸ் (கிராம படகு கிளப்), பேக்வாட்டர் நிஞ்ஜா (பிரதர்ஸ் போட் கிளப்), பேக்வாட்டர் வாரியர்ஸ் (டவுன் போட் கிளப்), கோஸ்ட் டாமினேட்டர்கள் (யுனைடெட் போட் கிளப்), மைட்டி ஓர்ஸ் (என்சிடிசி) ), பிரைட் சேஸர்ஸ் (வேம்பநாட் படகு கிளப்), ரேஜிங் ரோவர்ஸ் (போலீஸ் படகு கிளப்) மற்றும் தண்டர் ஓர்ஸ் (கேபிசி / எஸ்எஃப்சிசி).

லீக்கின் அடுத்த சுற்று (ஆகஸ்ட் 17) ஆலப்புழத்திலும் அதைத் தொடர்ந்து தாத்தாங்கடி (கோட்டயம் மாவட்டம், ஆகஸ்ட் 24), பிராவம் (எர்ணாகுளம் மாவட்டம், ஆகஸ்ட் 31), மரைன் டிரைவ் (கொச்சி, செப்டம்பர் 7), கோட்டப்புரம் (திருச்சூர் மாவட்டம், செப்டம்பர் 21), பொன்னானி (மலப்புரம், செப்டம்பர் 28) ஆகிய இடங்களில் நடைப்பெறும்.

இறுதிப் போட்டி மாநில தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வடக்கே 60 கி.மீ தொலைவில் உள்ள கொல்லத்தில் உள்ள அழகிய அஷ்டமுடி ஏரியில் நடைபெற உள்ளது.

சிபிஎல்லின் ரூ .5.9 கோடி பரிசுத் தொகை என்பது இந்தியாவின் நடத்தப்படும் விளையாட்டு தொடர்களில்  நான்காவது அதிகப்படியான பரிசுத்தொகையாகும். ஒவ்வொரு போட்டியின் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு முறையே ரூ .5 லட்சம், ரூ .3 லட்சம், ரூ .1 லட்சம் கிடைக்கும். மேலும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ .4 லட்சம் போனஸ் பரிசு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.