பிற விளையாட்டு

ஆசிய கைப்பந்து: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி + "||" + Asian volleyball: Indian team lost in final

ஆசிய கைப்பந்து: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி

ஆசிய கைப்பந்து: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
நய் பை டாவ்,

3-வது ஆசிய ஆண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (23 வயதுக்குட்பட்டோர்) மியான்மரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 21-25, 20-25, 25-19, 23-25 என்ற செட் கணக்கில் சீனதைபேயிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. இருப்பினும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் 25-18, 25-23, 25-18 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானை பந்தாடியது.