பிற விளையாட்டு

மாவட்ட கைப்பந்து போட்டி: சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி + "||" + District Volleyball Tournament: Chennai Girls Higher Secondary School Team Win

மாவட்ட கைப்பந்து போட்டி: சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி

மாவட்ட கைப்பந்து போட்டி: சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி
மாவட்ட கைப்பந்து போட்டியில், சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்றது.
சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் மாவட்ட பள்ளி அணிகளுக்கான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தலைமை தாங்கினார். சான் அகாடமி அறங்காவலர் அர்ச்சனா ஆனந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வருமானவரி துணை கமிஷனர் சுரேஷ் பெரியசாமி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஏ.ஜே. மார்ட்டின் சுதாகர், விருதுநகர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.கே.துரைசிங், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் ஏ.பழனியப்பன், பயிற்சியாளர்கள் ஜெகதீசன், கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் கோலபெருமாள் அணி 25-14, 25-12 என்ற நேர்செட்டில் செட்டிநாடு அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் வேலம்மாள், செயின்ட் பீட்ஸ், சேதுபாஸ்கர், பென்டிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ராட்லர்) அணி 25-21, 25-17 என்ற நேர்செட்டில் வேலம்மாள் அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் லேடி சிவசாமி, பிரசிடென்சி, சிவகாசி நாடார், குண்டூர் சுப்பையா பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.