பிற விளையாட்டு

ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய கைப்பந்து அணியினருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு + "||" + Winning silver medal in Asian competition Indian Volleyball team receives Rs. 1 lakh

ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய கைப்பந்து அணியினருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு

ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய கைப்பந்து அணியினருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு
ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய கைப்பந்து அணியினருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மியான்மரில் கடந்த வாரம் நடந்த 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 3-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் 1-3 என்ற செட் கணக்கில் சீன தைபேயிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றது. வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள், அதிகாரிகள் உள்பட 17 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன் அறிவித்துள்ளார். விரைவில் பாராட்டு விழா நடத்தி இந்திய அணியினருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராமவ்தார் சிங் ஜாக்கர் தெரிவித்துள்ளார்.