பிற விளையாட்டு

புரோ கபடி: அரியானா, பெங்கால் அணிகள் வெற்றி + "||" + Pro Kabaddi: Haryana, Bengal teams win

புரோ கபடி: அரியானா, பெங்கால் அணிகள் வெற்றி

புரோ கபடி: அரியானா, பெங்கால் அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், அரியானா, பெங்கால் அணிகள் வெற்றிபெற்றன.
ஆமதாபாத்,

7-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 36-33 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை சாய்த்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 28-26 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வீழ்த்தியது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்பூர் பாந்தர்ஸ்-புனேரி பால்டன் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.