பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி:கால்இறுதியில் சிந்து-பிரனீத் + "||" + World Badminton Tournament: Sindhu-Praneeth at the end of the quarter

உலக பேட்மிண்டன் போட்டி:கால்இறுதியில் சிந்து-பிரனீத்

உலக பேட்மிண்டன் போட்டி:கால்இறுதியில் சிந்து-பிரனீத்
25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது.
பாசெல், 

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பீவென் ஜாங்கை (அமெரிக்கா) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். சிந்து அடுத்து 2-ம் நிலை வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) எதிர்கொள்கிறார். தாய் ஜூ யிங்குக்கு எதிராக இதுவரை 14 முறை மோதியிருக்கும் சிந்து அதில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 21-13 என்ற நேர் செட்டில் அந்தோணி சினிசுகா ஜின்டிங்கை (இந்தோனேஷியா) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். மற்ற இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் நேர் செட்டில் தோற்று வெளியேறினர்.