பிற விளையாட்டு

புரோ கபடி:டெல்லியிடம் வீழ்ந்தது பெங்களூரு + "||" + Pro Kabaddi: Bengaluru falls to Delhi

புரோ கபடி:டெல்லியிடம் வீழ்ந்தது பெங்களூரு

புரோ கபடி:டெல்லியிடம் வீழ்ந்தது பெங்களூரு
7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
புதுடெல்லி, 

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 56-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 33-31 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. 8-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி 6 வெற்றி, 1 தோல்வி, 1 டை என்று 34 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணிக்கு இது 5-வது தோல்வியாகும். மற்றொரு திரிலிங்கான ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 24-21 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சுக்கு அதிர்ச்சி அளித்தது. 10-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்சுக்கு இது 3-வது வெற்றியாகும்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30), தபாங் டெல்லி-உ.பி யோத்தா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.