பிற விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வாழ்த்து + "||" + Central Sports Minister kiren rijiju congratulates PV Sindhu

சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வாழ்த்து

சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வாழ்த்து
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி. சிந்து  சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

மேலும் உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.


இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று புதிய வரலாற்றை படைத்துள்ளார். இது மிகச்சிறந்த நாள் ஆகும்.  உலக பேட்மிண்டனில் மட்டுமல்ல, இந்திய விளையாட்டுகளுக்கும் இவரது வெற்றி பெருமை சேர்க்கும். இந்திய மக்கள் மற்றும் பிரதமர் சார்பாக, நாங்கள் அவரது வெற்றியை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். நான் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.