பிற விளையாட்டு

தமிழ்நாடு கைப்பந்து சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு + "||" + Tamil Nadu Volleyball Association elected new administrators

தமிழ்நாடு கைப்பந்து சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு கைப்பந்து சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு கைப்பந்து சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை,

தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் (2019-2023) சென்னையில் நேற்று நடந்தது. நீதிபதி ஹரிபரந்தாமன் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. எஸ்.வாசுதேவன் தலைமையில் ஒரு அணியும், பொன் கவுதம் சிகாமணி எம்.பி. தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. காலையில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, மாலையில் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பொன் கவுதம் சிகாமணி 250 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.வாசுதேவன் 228 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். சேர்மன் பதவிக்கு ஏ.கே.சித்திரைபாண்டியன் 251 ஓட்டுகள் பெற்று தேர்வானார். அவரை எதிர்த்து நின்ற வெங்கடபதி 227 ஓட்டுகளுடன் தோல்வி அடைந்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் 252 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எம்.பிரபாகரன் 224 ஓட்டுகளுடன் தோல்வியை தழுவினார். பொருளாளர் பதவியை எம்.பி.செல்வகணேஷ் 255 ஓட்டுகளுடன் கைப்பற்றினார். இந்த பதவிக்கு போட்டியிட்ட ரவீந்திரன் 221 ஓட்டுகளுடன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

துணைசேர்மன்களாக குணசீலன் (238 ஓட்டு), ஜெகநாதன் (246), நாராயணசாமி (242), ராமானுஜம் (240), ரங்கசாமி (238) ஆகியோரும், இணைச் செயலாளர்களாக கலைச்செல்வன் (252), மகேந்திரன் (238), ரத்தினபாண்டியன் (237), சதாசிவம் (234) ஆகியோரும் தேர்வானார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல சுங்கத்துறை முதன்மை கமிஷனர் பொறுப்பேற்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலசுங்கத்துறை முதன்மை கமிஷனராக ஜி.வி.கிருஷ்ணராவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
2. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வக்கீல்களுக்கு நிவாரணத்தொகை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வக்கீல்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வக்கீல்களுக்கு வழங்கினார்.
3. தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு சோதனை
தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு சோதனை.
4. தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் சலூன் கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய கிராமப் பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
5. தமிழ்நாட்டில் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே வங்கிகள் செயல்படும்
தமிழ்நாட்டில், வங்கிகள் அனைத்தும் மே 3-ந்தேதிவரை பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.