பிற விளையாட்டு

நாடு திரும்பிய பிவி சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு + "||" + "Proud To Be An Indian": World Champion PV Sindhu After Arrival In India

நாடு திரும்பிய பிவி சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

நாடு திரும்பிய பிவி சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு
உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி,

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பி.வி சிந்து, நள்ளிரவு இந்தியா திரும்பினார். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் வந்த பி.வி சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பி.வி சிந்து கூறியதாவது:- “  எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் கடினமாக உழைத்து அதிக பதக்கங்களை வெல்வேன். 

2 முறை நான் தோல்வியுற்று, இந்த முறை வெற்றியை பெற்றுள்ளேன்.  இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு இந்தியராக  நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒலிம்பிக்கில்  பதக்கம் வெல்வதே எனது அடுத்த இலக்காகும்” என்றார்.