பிற விளையாட்டு

மாநில ஜூனியர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தபிதா புதிய சாதனை + "||" + State Junior Athletics: Tabitha's new record in length jumps

மாநில ஜூனியர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தபிதா புதிய சாதனை

மாநில ஜூனியர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தபிதா புதிய சாதனை
மாநில ஜூனியர் தடகள போட்டியின் நீளம் தாண்டுதலில் தபிதா புதிய சாதனை படைத்தார்.
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், தமிழ்நாடு தடகள சங்கம் அனுமதியுடன் மாவட்டங்களுக்கு இடையிலான 34-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா முன்னிலை வகித்தார். சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடக்க நாளில் நடந்த 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடைப்பந்தயத்தில் ஈரோடு வீராங்கனை வாணி முதலிடமும், போல்வால்ட் பந்தயத்தில் நெல்லை வீராங்கனை கிருஷ்ணவேணி முதலிடமும், சங்கிலி குண்டு எறிதலில் சென்னை வீராங்கனை மேதா முதலிடமும், டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் காஞ்சீபுரம் வீராங்கனை ஐஸ்வர்யா (12.79 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் முதலிடமும் பிடித்தனர். இதன் ஆண்கள் பிரிவில் 10 ஆயிரம் மீட்டர் நடைப்பந்தயத்தில் காஞ்சீபுரம் வீரர் கிருஷ்ணா முதலிடத்தையும், சங்கிலி குண்டு எறிதலில் நாமக்கல் வீரர் தினேஷ்ராஜா முதலிடத்தையும் தனதாக்கினார்கள். 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் காஞ்சீபுரம் வீராங்கனை பிரதிக்‌ஷா (5.60 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை வீராங்கனை ருத்திகா முதலிடமும் பிடித்தனர். 18 வயதுக்கு உட்பட்ட நீளம் தாண்டுதலில் காஞ்சீபுரம் வீராங்கனை தபிதா (5.98 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் முதலிடத்தை சொந்தமாக்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...

அதிகம் வாசிக்கப்பட்டவை