பிற விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: மானு-சவுரப் ஜோடிக்கு தங்கம் + "||" + World Cup Sniper Tournament: Gold for Manu-Sourabh Couple

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: மானு-சவுரப் ஜோடிக்கு தங்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: மானு-சவுரப் ஜோடிக்கு தங்கம்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், மானு-சவுரப் ஜோடி தங்கம் வென்றது. மேலும் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது.
ரியோ டி ஜெனீரோ,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்போட்டி பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று முன்தினம் நடந்த கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மானு பாகெர்- சவுரப் சவுத்ரி ஜோடி சக நாட்டவர்களான யாஷ்அஸ்வினி சிங் - அபிஷேக் வர்மா இணையை 17-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. தோல்வி அடைந்த யாஷ்அஸ்வினி- அபிஷேக் வர்மா ஜோடி வெள்ளிப்பதக்கம் பெற்றது.


இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று 9 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து வியக்க வைத்துள்ளது. மற்ற நாடுகள் ஒரு தங்கப்பதக்கத்துக்கு மேல் வெல்லவில்லை. சீனா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்
பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கப்பதக்கம் வென்றார்.
2. உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தல்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.