பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 9-வது தோல்வி + "||" + Pro Kabaddi: The 9th defeat of the Tamil Thalaivas

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 9-வது தோல்வி

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 9-வது தோல்வி
புரோ கபடி போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 9-வது தோல்வியை சந்தித்தது.
கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பலம் வாய்ந்த தபாங் டெல்லி அணி, தமிழ் தலைவாசை 4 முறை ஆல்-அவுட் செய்ததுடன் 50-34 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 11-வது வெற்றியை சுவைத்த டெல்லி அணி 59 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதே சமயம் 14-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றி, 9 தோல்வி, 2 டை என்று 27 புள்ளிகளுடன், 11-வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 42-39 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தியது.


இன்றைய லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தா- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 7.30 மணி), தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.