பிற விளையாட்டு

புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது + "||" + The final of Pro Kabaddi is being held in Ahmedabad

புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது

புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது
புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,

7-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘பிளே-ஆப்’ மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதியை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது. இதன்படி ஆமதாபாத்தில் அக்டோபர் 14-ந் தேதி 2 வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடக்கிறது. முதலாவது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது, 6-வது இடம் பிடிக்கும் அணிகளும், 2-வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 4-வது, 5-வது இடம் பிடிக்கும் அணிகளும் மோதும். ஆமதாபாத்தில் அக்டோபர் 16-ந் தேதி 2 அரைஇறுதிப்போட்டிகள் நடைபெறுகிறது. முதலாவது அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெறும் அணியும், முதலாவது வெளியேற்றுதல் சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணியும், இரண்டாவது அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெறும் அணியும், 2-வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியும் சந்திக்கும். இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் அக்டோபர் 19-ந் தேதி நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அரியானா ஸ்டீலர்சிடம் பணிந்தது
புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி 35-43 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சிடம் தோல்வியடைந்தது.
2. உலக கோப்பை கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா
உலக கோப்பை கூடைப்பந்து போட்டி யில் ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
3. புரோ கபடி: பெங்கால் அணியிடம் மும்பை தோல்வி
புரோ கபடி போட்டியில், பெங்கால் அணியிடம் மும்பை அணி தோல்வியடைந்தது.
4. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 9-வது தோல்வி
புரோ கபடி போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 9-வது தோல்வியை சந்தித்தது.
5. அகில இந்திய ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி
அகில இந்திய ஆக்கியின், இறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோத உள்ளன.