பிற விளையாட்டு

‘ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு’ - பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி + "||" + Next goal is to win gold at the Olympics - Interview with badminton player PV Sindhu

‘ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு’ - பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி

‘ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு’ - பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தார்.
புதுடெல்லி,

சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் நடந்த உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனையான ஐதராபாத்தை சேர்ந்த 24 வயது பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். டெல்லியில் நேற்று நடந்த ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-


தற்போது நெருக்கடியும், பொறுப்பும் அதிகரித்து இருக்கிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு எல்லோரும் என்னை குறி வைப்பார்கள் என்பது எனக்கு தெரியும். எனவே நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். சில விஷயங்களில் மாற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை நான் களம் காணும் போது புதிய திட்டத்துடன் தான் செல்கிறேன்.

உலக போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல 5 வருடம் போராடினேன். எல்லா முறையும் தோல்வியை சந்தித்தேன். கடும் போராட்டமும், கடின உழைப்புக்கும் இந்த முறை பலன் கிடைத்தது. எனது பெற்றோர் எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளனர். வெற்றியில் பயிற்சியாளர்களின் பங்கு முக்கியமானது. பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற வலுவான மனநிலை அவசியமானதாகும்.

நான் படிப்படியாக முன்னேற்றம் காண விரும்புகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு நிறைய போட்டிகள் இருக்கிறது. நான் என்னுடைய சிறந்த ஆட்ட நிலையை தொடர வேண்டும். அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது அடுத்த இலக்காகும். தற்போது எனது கவனம் எல்லாம் அடுத்து நடைபெற இருக்கும் சீனா மற்றும் கொரியா ஓபன் போட்டியில் தான் உள்ளது. இந்த போட்டிகளுக்காக கடினமாக தயாராகி வருகிறேன். உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் எனது நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. எனது ஆட்ட திறன் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. தேவையற்ற நெருக்கடிகளை என் மீது திணிக்க விரும்புவதில்லை, எனது ஆட்ட திறனில் உண்மையிலேயே நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கிறேன். இன்னும் நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது. இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி
அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.