பிற விளையாட்டு

100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை + "||" + State champion in the 100-meter hurdle race record for Tabitha

100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை

100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை
100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை படைத்தார்.
உடுப்பி,

31-வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் நேற்று தொடங்கியது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 14.34 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 7 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக வீராங்கனை மேகனா ஷெட்டி இந்த போட்டியில் 14.53 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தபிதா தகர்த்தார். இதேபிரிவில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தபிதா 5.89 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். சாதனை படைத்த தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.தொடர்புடைய செய்திகள்

1. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா புதிய சாதனை
தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை தபிதா புதிய சாதனை படைத்தார்.
2. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு தங்கம்
தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை ஐஸ்வர்யா தங்கபதக்கம் வென்றார்.
3. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஆன்ட்ரியாவுக்கு தங்கம்
தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை ஆன்ட்ரியா தங்கம் பதக்கம் வென்றார்.