பிற விளையாட்டு

ஆசிய சீனியர் கைப்பந்து: கால்இறுதியில் இந்தியா + "||" + Asian senior volleyball: India in quarter-finals

ஆசிய சீனியர் கைப்பந்து: கால்இறுதியில் இந்தியா

ஆசிய சீனியர் கைப்பந்து: கால்இறுதியில் இந்தியா
ஆசிய சீனியர் கைப்பந்து போட்டியின் கால்இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
தெக்ரான்,

16 அணிகள் இடையிலான 20-வது ஆசிய சீனியர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரானில் உள்ள தெக்ரானில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி நேற்று தனது கடைசி லீக்கில் ஓமனை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் இந்தியா 22-25, 25-12, 25-21, 25-19 என்ற செட் கணக்கில் ஓமனை வீழ்த்தியது. 2-வது வெற்றியை பெற்ற இந்திய அணி இதன் மூலம் கால்இறுதிக்கு முன்னேறியது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டிக்கும் தகுதி பெற்றது.