பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவிந்தர் சிங் அபாரம் + "||" + Indian boxer Kavinder Singh best performence in World Boxing Tournament

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவிந்தர் சிங் அபாரம்

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவிந்தர் சிங் அபாரம்
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவிந்தர் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
எகடெரின்பர்க்,

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஷ்ட், சீனாவின் செனா ஜிஹாவை சந்தித்தார். அவர் வலுவாக விட்ட சில குத்துகளில் ஜிஹாவின் முகத்தில் ரத்தம் வழிந்தது. முடிவில் கவிந்தர் சிங் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.


மற்றொரு இந்திய வீரர் சஞ்ஜீத் 97 கிலோ உடல் எடைப்பிரிவில் 4-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து வீரர் ஸ்காட் பாரெஸ்டை தோற்கடித்து அடுத்த சுற்றை எட்டினார். அதே சமயம் இந்தியாவின் பிரிஜேஷ் யாதவ் (81 கிலோ) 1-4 என்ற கணக்கில் பாய்ராம் மால்கனிடம் (துருக்கி) தோற்று வெளியேறினார்.