பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி - சிந்து, காஷ்யப் முன்னேற்றம் + "||" + Chinese Open Badminton: Saina Shock Failure - Sindhu, Kashyap Progress

சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி - சிந்து, காஷ்யப் முன்னேற்றம்

சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி - சிந்து, காஷ்யப் முன்னேற்றம்
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில், சாய்னா அதிர்ச்சி தோல்வியடைந்தார். சிந்து, காஷ்யப் ஆகியோர் அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.
சாங்ஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சாங்ஜோவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால் 10-21, 17-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-18, 21-12 என்ற நேர்செட்டில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் சாய் பிரனீத் 21-19, 21-23, 21-14 என்ற செட் கணக்கில் சுப்பான்யூ அவிஹிங்சனோனையும் (தாய்லாந்து), காஷ்யப் (இந்தியா) 21-12, 21-15 என்ற நேர் செட்டில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லிவெர்ட்சையும் சாய்த்து 2-வது சுற்றை எட்டினர்.