பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து வெளியேற்றம் + "||" + China Open: PV Sindhu Knocked Out After Losing To Pornpawee Chochuwong In Round Of 16

சீன ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து வெளியேற்றம்

சீன ஓபன் பேட்மிண்டன்:  பிவி சிந்து வெளியேற்றம்
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டித்தொடரில் தாய்லாந்து வீராங்கனையிடம் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.
பெய்ஜிங், 

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின்  16-வது சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின்  போர்ன்பவீ சோச்சுவாங்கும் இந்தியாவின் பிவி சிந்துவும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-12,13-21,19-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதன் மூலம் போட்டித்தொடரில் இருந்து பிவி சிந்து வெளியேறினார். 

முன்னதாக, மற்றொரு வீராங்கனையான சாய்னா நேவாலும் தாய்லாந்தின் பூஷ்னன் ஆங்பாம்ருங்பானும் மோதினர். இதில், 10-21,17-21 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த தோல்விகள் மூலம்,  சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் பிரிவில் கோப்பை வெல்லும் இந்தியாவின் நம்பிக்கை முடிவுக்கு வந்தது.