பிற விளையாட்டு

உலக மல்யுத்த போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா + "||" + World Wrestling Tournament Indian player Bajrang Poonia won the bronze medal

உலக மல்யுத்த போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா

உலக மல்யுத்த போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா
உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப்பதக்கம் வென்றார்.
நுர் சுல்தான், 

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில்  அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்தியாவின் பஜ்ரங் பூனியா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இன்று மங்கோலியாவின் துல்கா துமுர் ஓசிரை எதிர்கொண்டார்.

துவக்கத்தில் ஏமாற்றிய பஜ்ரங் பூனியா , மீண்டும் துல்கா துமுர் ஓசிர் பிடியில் சிக்க, முதல் பாதியில் 2-6 என்ற கணக்கில் பின்தங்கினார். பின் 2-வது பாதியில் துல்கா தோமர்  ஓசிரை  8-7 என்ற புள்ளி கணக்கில் பஜ்ரங்  பூனியா வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய  நம்பிக்கை நட்சத்திரம் பஜ்ரங் பூனியா வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

கடந்த 2013-ல் வெண்கலம், 2018-ல் வெள்ளி தற்போது மீண்டும்  வெண்கலம் என உலக சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது பதக்கத்தை கைப்பற்றினார் பஜ்ரங் பூனியா.