பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் பட்டத்தை தக்க வைத்தார் + "||" + Chinese Open Badminton: Spain defeated Carolina Marin to retain title

சீன ஓபன் பேட்மிண்டன்: ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் பட்டத்தை தக்க வைத்தார்

சீன ஓபன் பேட்மிண்டன்: ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் பட்டத்தை தக்க வைத்தார்
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் பட்டத்தை தக்க வைத்தார்.
சாங்ஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சாங்ஜோவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சீன தைபே வீராங்கனை தாய் யிங்கை சந்தித்தார். 65 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கரோலினா மரின் 14-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் தாய் யிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரான ஜப்பானின் கென்டோ மோமோதா 19-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீரர் அந்தோணி சினிசுகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.ஆசிரியரின் தேர்வுகள்...