புரோ கபடி லீக்: பெங்கால் அணி 11-வது வெற்றி


புரோ கபடி லீக்: பெங்கால் அணி 11-வது வெற்றி
x
தினத்தந்தி 22 Sep 2019 11:49 PM GMT (Updated: 22 Sep 2019 11:49 PM GMT)

புரோ கபடி லீக் போட்டியில், பெங்கால் அணி 11-வது வெற்றியை பதிவு செய்தது.

ஜெய்ப்பூர்,

7-வது புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த 102-வது லீக் ஆட்டத்தில் மும்பை-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் மும்பை அணி 31-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. 17-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 9-வது வெற்றியை பதிவு செய்தது. 18-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் சந்தித்தன. கடைசி வரை விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் பெங்கால் அணி 41-40 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 11-வது வெற்றியை ருசித்தது. 18-வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் அணி 9-வது தோல்வியை சந்தித்தது.

இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story