பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: அரியானா அணி 11-வது வெற்றி + "||" + Pro Kabaddi League: Haryana Team wins 11th

புரோ கபடி லீக்: அரியானா அணி 11-வது வெற்றி

புரோ கபடி லீக்: அரியானா அணி 11-வது வெற்றி
புரோ கபடி லீக் தொடரில், அரியானா அணி 11-வது வெற்றியை பதிவு செய்தது.
ஜெய்ப்பூர்,

7-வது புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த 104-வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அரியானா அணி முதல் பாதியில் ஒரு முறையும், 2-வது பாதியில் ஒரு முறையும் பாட்னா அணியை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது. முடிவில் அரியானா அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. 17-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி 11-வது வெற்றியை பெற்றது. 18-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா அணி 11-வது தோல்வியை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தால் ஆட்டத்தில் இறுதி வரை அனல் பறந்தது. முடிவில் இந்த ஆட்டம் 39-39 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பால்டன் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி லீக்: மும்பை அணி 10-வது வெற்றி
புரோ கபடி லீக் தொடரில் மும்பை அணி 10-வது வெற்றியை பதிவு செய்தது.
2. புரோ கபடி லீக்: பெங்கால் அணி 11-வது வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில், பெங்கால் அணி 11-வது வெற்றியை பதிவு செய்தது.
3. புரோ கபடி லீக்: டெல்லி அணி 13-வது வெற்றி
புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி தனது 13-வது வெற்றியை பதிவு செய்தது.
4. புரோ கபடி லீக்: மும்பை 7-வது வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில், மும்பை அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.
5. புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது
புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 25-51 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...