பிற விளையாட்டு

பெடரேஷன் கோப்பை கைப்பந்து: அகில இந்திய பல்கலைக்கழக அணி வெற்றி + "||" + Federation Cup Volleyball: All India University Team Win

பெடரேஷன் கோப்பை கைப்பந்து: அகில இந்திய பல்கலைக்கழக அணி வெற்றி

பெடரேஷன் கோப்பை கைப்பந்து: அகில இந்திய பல்கலைக்கழக அணி வெற்றி
பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டியில், அகில இந்திய பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றது.
அமிர்தசரஸ்,

பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் பிரிவில் 9 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றுள்ளன. இதில் பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் அணி 27-25, 26-24, 25-17 என்ற நேர்செட்டில் டெல்லி அணியை தோற்கடித்தது. ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் அணி 25-20, 25-20, 23-25, 25-23 என்ற செட் கணக்கில் ஆந்திராவை சாய்த்தது. இன்னொரு ஆட்டத்தில் அகில இந்திய பல்கலைக்கழக அணி 20-25, 20-25, 25-12, 25-14, 15-7 என்ற செட் கணக்கில் அரியானா அணியை போராடி வென்றது.