பிற விளையாட்டு

புரோ கபடி: அடுத்த சுற்றுக்கு அரியானா முன்னேற்றம் + "||" + Pro Kabaddi: Haryana progresses to the next round

புரோ கபடி: அடுத்த சுற்றுக்கு அரியானா முன்னேற்றம்

புரோ கபடி: அடுத்த சுற்றுக்கு அரியானா முன்னேற்றம்
புரோ கபடி போட்டியின் அடுத்த சுற்றுக்கு அரியானா அணி முன்னேறியது.
பஞ்ச்குலா,

7-வது புரோ கபடி லீக் தொடரில் பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த 113-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 60-40 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 15-வது வெற்றியை பதிவு செய்தது. 11-வது தோல்வியை சந்தித்த புனே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. மற்றொரு ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் கண்ட அரியானா ஸ்டீலர்ஸ் 38-37 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வென்றது. 19-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா 12 வெற்றி, 6 தோல்வி, ஒரு சமன் என்று 65 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து இருப்பதுடன் அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றது. ஏற்கனவே டெல்லி, பெங்கால் அணிகளும் அடுத்த சுற்றை எட்டி விட்டன.


இன்றைய லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி (இரவு 7.30 மணி), தமிழ் தலைவாஸ்-மும்பை (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தல்: மராட்டியம், அரியானாவில் அமைதியான வாக்குப்பதிவு
மராட்டியம், அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
2. மராட்டியம், அரியானாவில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சி அமைக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்
மராட்டியம், அரியானா மாநிலங்களில் மீண்டும் பா.ஜனதா கட்சி எளிதான வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
3. சட்ட மன்ற தேர்தல்:அரியானாவில் 65 %,மராட்டியத்தில் 60.5 % வாக்குகள் பதிவு
மாலை 6 மணி நிலவரப்படி அரியானாவில் 65 %, மராட்டியத்தில் 60.5 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.
4. அரியானா மற்றும் மராட்டியத்தில் காலை 9 மணி நிலவரப்படி 8.73% மற்றும் 5.46% வாக்குப்பதிவு
அரியானா மற்றும் மராட்டியத்தில் காலை 9 மணி நிலவரப்படி 8.73% மற்றும் 5.46% வாக்குப்பதிவாகி உள்ளது.
5. மராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்: 24-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
மராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 24-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.