பிற விளையாட்டு

கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி - ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தது + "||" + India qualify for the final in the mixed series race - also confirmed the Olympic venue

கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி - ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தது

கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி - ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தது
கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன், ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தது.
தோகா,

தோகாவில் நடந்து வரும் உலக தடகள போட்டியில் 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு களத்தில் குதித்தன. இதில் முகமது அனாஸ், விஸ்மயா, ஜிஸ்னா மேத்யூ, நோவா நிர்மல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.14 வினாடிகளில் இலக்கை கடந்து தனது பிரிவில் போலந்து, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை பிடித்ததுடன் இறுதி சுற்றுக்கும் முன்னேறியது. இந்த சீசனில் இந்திய குழுவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இறுதிசுற்றை எட்டியதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தையும் இந்திய அணி உறுதி செய்தது. இன்னொரு பிரிவில் அமெரிக்கா 3 நிமிடம் 12.42 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி புதிய உலக சாதனையோடு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...