பிற விளையாட்டு

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: தமிழக கபடி அணிகள் தேர்வு - சென்னையில் 5, 6-ந் தேதிகளில் நடக்கிறது + "||" + Calo India Youth Games: Tamil Nadu Kabaddi Teams Selection - takes place in Chennai on 5th and 6th

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: தமிழக கபடி அணிகள் தேர்வு - சென்னையில் 5, 6-ந் தேதிகளில் நடக்கிறது

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: தமிழக கபடி அணிகள் தேர்வு - சென்னையில் 5, 6-ந் தேதிகளில் நடக்கிறது
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான, தமிழக கபடி அணிகள் தேர்வு சென்னையில் நடக்க உள்ளது.
சென்னை,

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமியருக்கான தமிழக கபடி அணிகள் தேர்வு சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் சிறுவர்களுக்கான தேர்வு வருகிற 5-ந் தேதியும், சிறுமிகளுக்கான தேர்வு வருகிற 6-ந் தேதியும் காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரிவில் பங்கேற்பவர்கள் 1-1-2003 அன்றோ அதற்கு பின்போ பிறந்து இருக்க வேண்டும். உடல் எடை 56 கிலோவுக்கு கீழ் இருக்க வேண்டும். 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் பிரிவில் பங்கேற்பவர்கள் 1-1-1999 அன்றோ அதற்கு பின்போ பிறந்து இருக்க வேண்டும். சிறுவர்கள் 75 கிலோவுக்கு கீழும், சிறுமிகள் 70 கிலோவுக்கு கீழும் இருக்க வேண்டும். இந்த தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் தேவையான வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச்செயலாளர் ஏ.ஷபியுல்லா தெரிவித்துள்ளார்.