பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூருவை வீழ்த்தியது ஜெய்ப்பூர் + "||" + Pro Kabaddi: Jaipur toppled Bangalore

புரோ கபடி: பெங்களூருவை வீழ்த்தியது ஜெய்ப்பூர்

புரோ கபடி: பெங்களூருவை வீழ்த்தியது ஜெய்ப்பூர்
புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு பஞ்ச்குலாவில் நடந்த பரபரப்பான 120-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 41-34 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சுக்கு அதிர்ச்சி அளித்தது.
பஞ்ச்குலா, 

புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு பஞ்ச்குலாவில் நடந்த பரபரப்பான 120-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 41-34 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சுக்கு அதிர்ச்சி அளித்தது. 21-வது லீக்கில் ஆடிய ஜெய்ப்பூர் அணி 9 வெற்றி, 10 தோல்வி, 2 சமன் என்று 57 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் ஏற்கனவே பிளே-ஆப் சுற்றை எட்டி விட்ட அரியானா ஸ்டீலர்ஸ் அணி 52-32 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 13-வது வெற்றியை பதிவு செய்தது. இன்றைய லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தா-தபாங் டெல்லி (இரவு 7.30 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...