பிற விளையாட்டு

மாவட்ட மாஸ்டர்ஸ் தடகளம்:1,500 மீட்டர் ஓட்டத்தில் நம்பீசன் முதலிடம் + "||" + District Masters Athletics: Nambisan topped the 1,500-meter run

மாவட்ட மாஸ்டர்ஸ் தடகளம்:1,500 மீட்டர் ஓட்டத்தில் நம்பீசன் முதலிடம்

மாவட்ட மாஸ்டர்ஸ் தடகளம்:1,500 மீட்டர் ஓட்டத்தில் நம்பீசன் முதலிடம்
சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
சென்னை, 

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் தொடக்க நாளில் நடந்த ஆண்களுக்கான 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.செண்பகமூர்த்தி முதலிடம் பிடித்தார். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் கிருஷ்ணசாமியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிரிபிள்ஜம்ப்பில் எஸ்.துரைராஜனும், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஈட்டி எறிதலில் விஷ்வாம்பரமும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான குண்டு எறிதலில் டி.சித்தரஞ்சனும், 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நம்பீசனும் முதலிடம் பிடித்தனர்.

பெண்களுக்கான 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் டி.ருக்மணி தேவியும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் சுந்தராம்பாளும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிரிபிள்ஜம்ப்பில் பி.சசிகலாவும் முதலிடம் பெற்றனர். முதல் நாள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர்கள் ஆர்யா, எஸ்.ஜே.சூர்யா, நடிகை அதுல்யா, டைரக்டர்கள் கே.ஆர்., பிரபு சாலமன், மகிழ் திருமேணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்க தலைவர் எம்.செண்பகமூர்த்தி, செயலாளர் டி.ருக்மணி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,898 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,898 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
2. போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது வழக்குப்பதிவு
போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. கோவை மாவட்டம் முழுவதும் 1,509 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன
கோவை மாவட்டம் முழுவதும் 1,509 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
4. வேலூர் மாவட்டத்தில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது
விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
5. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் பயின்ற 1,252 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் பிச்சுமணி வழங்கினார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயின்ற 1,252 மாணவ-மாணவிகளுக்கு துணைவேந்தர் பிச்சுமணி பட்டம் வழங்கினார்.