பிற விளையாட்டு

உலக தடகளம்:மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் முதலிடம் + "||" + World Athletics: Ethiopia Player tops Marathon

உலக தடகளம்:மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் முதலிடம்

உலக தடகளம்:மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் முதலிடம்
உலக தடகளத்தின் மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் லெலிசா டேசிசா முதலிடம் பிடித்தார்.
தோகா, 

உலக தடகளத்தின் மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் லெலிசா டேசிசா முதலிடம் பிடித்தார்.

கென்யா வீராங்கனை

17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நேற்றுடன் முடிவடைந்தது. 10 நாட்களாக நடந்த இந்த போட்டியில் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான கென்யா வீராங்கனை ஹெலென் ஓபிரி புதிய போட்டி சாதனையுடன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். அவர் இலக்கை 14 நிமிடம் 26.72 வினாடிகளில் கடந்தார்.

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெதர்லாந்து வீராங்கனை சிபன் ஹசன் 3 நிமிடம் 51.95 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த தொடரில் அவர் வென்ற 2-வது தங்கம் இதுவாகும். ஏற்கனவே 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் 26 வயதான சிபன் ஹசன் மகுடம் சூடியிருந்தார்.

மாரத்தானில் யார்?

நள்ளிரவில் நடந்த ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் (42.19 கிலோ மீட்டர் தூரம்) டாப்-2 இடங்களை எத்தியோப்பியா வீரர்கள் பிடித்தனர். அதில் லெலிசா டேசிசா 2 மணி 10 நிமிடம் 40 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் தனதாக்கினார். உலக மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் ஒருவர் பட்டம் வெல்வது 2001-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதில் பங்கேற்ற 73 வீரர்களில் 55 வீரர்கள் மட்டுமே பந்தய தூரத்தை நிறைவு செய்தனர்.

ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கிறிஸ்டியன் கோல்மன், ஜஸ்டின் கேத்லின், மைக்கேல் ரோஜர்ஸ், நோவா லைலெஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழுவினர் 37.10 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். இந்த பிரிவில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் அமெரிக்க அணி பட்டம் வென்று இருக்கிறது. இதன் பெண்கள் பிரிவில் ஷெல்லி அன் பிராசெர் பிரைஸ், நதாலி ஒயிட்டி, ஜோனிலே சுமித், ஷெரிக்கா ஜாக்சன் ஆகியோர் கொண்ட ஜமைக்கா அணியினர் (41.44 வினாடி) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.