பிற விளையாட்டு

புரோ கபடி:பாட்னாவுக்கு ஆறுதல் வெற்றி + "||" + Pro Kabaddi: Comfort win for Patna

புரோ கபடி:பாட்னாவுக்கு ஆறுதல் வெற்றி

புரோ கபடி:பாட்னாவுக்கு ஆறுதல் வெற்றி
7-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு நொய்டாவில் நடந்த 124-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 69-41 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது.
நொய்டா, 

7-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு நொய்டாவில் நடந்த 124-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 69-41 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பாட்னா தனது கடைசி லீக் ஆட்டத்தை ஆறுதல் வெற்றியோடு முடித்து இருக்கிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் பர்தீப் நார்வல் 36 புள்ளிகள் குவித்தார். மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா 43-39 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வென்றது.

இன்றைய லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 7.30 மணி), தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...