பிற விளையாட்டு

பெண்கள் உலக குத்துச்சண்டை:சரிதாதேவி வெளியேற்றம் + "||" + Women's World Boxing: Sarita Devi's eviction

பெண்கள் உலக குத்துச்சண்டை:சரிதாதேவி வெளியேற்றம்

பெண்கள் உலக குத்துச்சண்டை:சரிதாதேவி வெளியேற்றம்
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது.
உலன் உடே, 

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 60 கிலோ உடல் எடைப்பிரிவில் நேரடியாக கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் அடியெடுத்து வைத்த முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் சரிதாதேவி, ரஷியாவின் நடாலியா ஷட்ரினாவுடன் மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சரிதாதேவி 0-5 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார். இதே போல் உலக போட்டியில் முதல்முறையாக களம் கண்ட இந்தியாவின் நந்தினி (81 கிலோ எடைப்பிரிவு), ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் 0-5 என்ற கணக்கில் வீழ்ந்தார்.