பிற விளையாட்டு

புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி + "||" + Pro Kabaddi League Tamil talaivas Comfort win for the team

புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி

புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி
7-வது புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி ஆறுதல் வெற்றியை பெற்றது.
நொய்டா, 

7-வது புரோ கபடி லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.யோத்தா, யு மும்பா, பெங்களூரு புல்ஸ் ஆகிய 6 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறி உள்ளன. எஞ்சிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நொய்டாவில் நடந்த திரிலிங்கான லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. 14 ஆட்டங்களுக்கு பிறகு தமிழ் தலைவாஸ் அணி இந்த ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியில் அஜித்குமார் 10 புள்ளிகள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணி 48-38 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை சாய்த்து 7-வது வெற்றியை பெற்றது. இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), உ.பி.யோத்தா-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன. 11-ந் தேதியுடன் லீக் ஆட்டம் முடிகிறது. 14-ந் தேதி முதல் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத்தில் தொடங்குகிறது.