பிற விளையாட்டு

புரோ கபடி: கடைசி லீக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி + "||" + Pro Kabaddi: Tamil Thalaivas defeat in last league

புரோ கபடி: கடைசி லீக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி

புரோ கபடி: கடைசி லீக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி
புரோ கபடி: கடைசி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது.
நொய்டா,

7-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு நொய்டாவில் நடந்த 128-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 29-33 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சிடம் போராடி தோல்வியை தழுவியது. தனது கடைசி லீக்கில் விளையாடி முடித்து விட்ட தமிழ் தலைவாஸ் அணி 22 ஆட்டங்களில் 4 வெற்றி, 15 தோல்வி, 3 சமன் என்று 37 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41-36 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.


இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.