பிற விளையாட்டு

பெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + Women's World Boxing: Indian heroics advance to quarter-finals

பெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்

பெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு முன்னேறினர்.
உலன் உடே,

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 54 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை ஜமுனா போரோ 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனை ஒவ்டாட் ஸ்போவை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ஜமுனா போரோ, பெலாரஸ் வீராங்கனை யுலியா அபனாசோவிச்சை சந்திக்கிறார்.


69 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், கடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், மொராக்கோ வீராங்கனை ஒமய்மா பெல் அபிப்பை எதிர்கொண்டார். இதில் எதிராளிக்கு ஆக்ரோஷமாக குத்துவிட்ட லவ்லினா போர்கோஹெய்ன் 5-0 என்ற கணக்கில் ஒமய்மா பெல் அபிப்பை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் கால்இறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன், போலந்து வீராங்கனை கரோலினா கோஸ்ஜிஸ்காவுடன் மோதுகிறார்.