பிற விளையாட்டு

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தனது முந்தைய சாதனையை முறியடித்தார் + "||" + தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தனது முந்தைய சாதனையை முறியடித்தார்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தனது முந்தைய சாதனையை முறியடித்தார்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தனது முந்தைய சாதனையை முறியடித்தார்
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், குண்டு எறிதலில் நட்சத்திர வீரர் தஜிந்தர்பால் சிங் 20.92 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

* நெதர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 21-12, 21-9 என்ற நேர் செட் கணக்கில் பெலிக்ஸ் புரஸ்டெட்டை (சுவீடன்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


* ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆன்டி பிளவர், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர், தலைமை பயிற்சியாளர், டெக்னிக்கல் இயக்குனர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பில் 12 ஆண்டு காலம் அங்கம் வகித்த அவர் முழுமையாக விலகியுள்ளார்.

* ராஞ்சியில் நடந்து வரும் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த குண்டு எறிதலில் நட்சத்திர வீரர் தஜிந்தர்பால் சிங் 20.92 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

* சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மன்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் பெரெட்டினியையும் (இத்தாலி), டேனில் மெட்விடேவ் (ரஷியா) 7-6 (7-5), 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாசையும் (கிரீஸ்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...