பிற விளையாட்டு

புரோ கபடி போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? + "||" + How much is the prize for the team that wins the Pro Kabaddi Tournament?

புரோ கபடி போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?

புரோ கபடி போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
புரோ கபடி போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

7-வது புரோ கபடி லீக் போட்டியில் லீக் சுற்று முடிந்து நாளை அரைஇறுதிக்கான பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் இந்த போட்டியில் வாகை சூடும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும். 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.90 லட்சமும், 5-வது, 6-வது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.45 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்றும், இதுதவிர தனிநபர் சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.