உலக இளையோர் செஸ்: சென்னை வீரர் பிரக்யானந்தா ‘சாம்பியன்’


உலக இளையோர் செஸ்: சென்னை வீரர் பிரக்யானந்தா ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 12 Oct 2019 10:44 PM GMT (Updated: 12 Oct 2019 10:44 PM GMT)

உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வீரர் பிரக்யானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

மும்பை,

உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்தது. இதில் 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவின் கடைசி சுற்றில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இந்திய வீரரான பிரக்யானந்தா, ஜெர்மனி வீரர் வாலென்டின் புக்கெல்ஸ்சை சந்தித்தார். வெள்ளை நிற காயுடன் எச்சரிக்கையாக ஆடிய பிரக்யானந்தா 34-வது காய் நகர்த்ததில் டிரா கண்டார். அடுத்த இடத்தில் இருந்த அர்மேனியா வீரர் ஷந்த் சர்க்ஸ்யான்-இந்திய வீரர் அர்ஜூன் கல்யாண் மோதிய ஆட்டமும் டிராவில் முடிந்தது.

கடைசி சுற்று முடிவில் 14 வயதான சென்னை மாணவர் பிரக்யானந்தா மொத்தம் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அர்மேனியா வீரர் ஷந்த் சர்க்ஸ்யான் (8.5 புள்ளிகள்) 2-வது இடம் பெற்றார். மற்ற வயது பிரிவு போட்டிகளில் இந்தியர்களான வந்திகா அகர்வால், திவ்யா தேஷ்முக், ஸ்ரீஹரி ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், ஆரோன்யாக் கோஷ், ஸ்ரீஷ்வன், ரக்‌ஷிதா ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர். உலக இளையோர் செஸ் போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.


Next Story