பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி + "||" + Pro Kabaddi: Bangalore and Mumbai teams qualify for the semi-finals

புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி

புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
புரோ கபடி போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெற்றன.
ஆமதாபாத்,

7-வது புரோ கபடி லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் ஆமதாபாத்தில் நேற்று இரவு நடந்த அரைஇறுதிக்கான முதலாவது ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி, உ.பி.யோத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் முன்னிலை வகித்த உ.பி.யோத்தா அணி கடைசி கட்டத்தில் பின்னடவை சந்தித்தது. அந்த சறுக்கலில் இருந்து அந்த அணியால் மீள முடியவில்லை. முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 48-45 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட உ.பி.யோத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறியது. பெங்களூரு அணி வீரர் பவான் ஷெராவத் 20 புள்ளிகள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.


அரைஇறுதிக்கான மற்றொரு ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் 11 புள்ளிகள் வரை இரு அணிகளும் சமநிலை வகித்தன. அதன் பிறகு மும்பை அணியின் கை ஓங்கியது. முடிவில் மும்பை அணி 46-38 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த அரியானா அணி நடையை கட்டியது.

நாளை (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30 மணி) அணியும், 2-வது அரைஇறுதியில் பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகள் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.
2. காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி...! சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்
காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி வைத்ததற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
3. புரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்? பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
புரோ கபடி போட்டியில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பெங்கால்-டெல்லி அணிகள் மோதுகின்றன.
4. புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்
புரோ கபடியில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
5. புரோ கபடி: கடைசி லீக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி
புரோ கபடி: கடைசி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது.