பிற விளையாட்டு

டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம் + "||" + Ethiopia player, heroic tops in Delhi marathon

டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்

டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்
டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம் பிடித்தனர்.
புதுடெல்லி,

15-வது டெல்லி அரை மாரத்தான் பந்தயம் டெல்லியில் நேற்று நடந்தது. போட்டியை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள் பிரிவில் நடப்பு சம்பியன் எத்தியோப்பியா வீரர் அன்டம்லக் பெலிஹூ 59 நிமிடம் 10 வினாடிகளில் இலக்கை கடந்து பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். பெண்கள் பிரிவில் எத்தியோப்பியாவின் செஹாய் ஜெமிச்சு 66 நிமிடங்களில் முதலாவது வந்து பட்டத்தை தட்டிச் சென்றார். இதர பிரிவுகளில் பல வீராங்கனைகள் காற்று மாசு காரணமாக முக கவசம் அணிந்தபடி ஓடினர்.