பிற விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து வெற்றி + "||" + French Open Badminton: PV Sindhu wins

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து வெற்றி

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து வெற்றி
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், மிட்செல் லீ எதிரான ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றிபெற்றார்.
பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மிட்செல் லீயை (கனடா) வீழ்த்தினார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சுபாங்கர் தேவ் 15-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் தாமி சுகிர்டோவுக்கு (இந்தோனேஷியா) அதிர்ச்சி அளித்தார்.