பிற விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம் + "||" + French Open Badminton Silver medal for Indian couple

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம்

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம்
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்தது.
பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி, நம்பர் ஒன் இணையான இந்தோனேஷியாவின் மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்ஜெயா சுகாமுல்ஜோவை எதிர்கொண்டது. 35 நிமிடம் நடந்த இந்த போட்டியில் சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி 18-21, 16-21 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. போட்டிக்கு பிறகு சிராக் ஷெட்டி அளித்த பேட்டியில், ‘இரண்டு செட்டிலும் நாங்கள் மெதுவான தொடக்கம் கண்டோம். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் சமநிலையை எட்டினோம்.

எங்களது ஷாட் சரியாக அமைந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். முதல் செட்டை நாங்கள் வென்று இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி அமைந்து இருக்கக்கூடும். தோல்வி கண்டாலும் நாங்கள் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. தாய்லாந்து ஓபன் போட்டிக்கு அடுத்து நாங்கள் சிறப்பாக ஆடிய ஆட்டம் இதுவாகும்’ என்று தெரிவித்தார்.